கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டிய மின் மயானம் செயல்பட தற்காலிக தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதி மன்றம்.  மேலும் இந்த மின் மயானத்தை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் களஆய்வு செய்து அறிக்கை செய்து அறிக்கை வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை 2019ல் இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் மின் மயானம் அமைக்க அந்த கிராம் பிரசிடெண்டிடம் ஒப்புதல் பெற்று கட்டுமான பணிகளை முடித்துள்ளது. ஆனால் இவ்வாறு அந்த கிராம பிரசிடெண்ட் அனுமதி வழங்கியது முறையற்றது என கூறி மின் மயானத்தின் செயல்பாட்டுக்கு எதிராக கோவையை சேர்ந்த SN சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை மே மாதம் தாக்கல் செய்தார்.

அதில் அவர்,  தமிழ் நாடு கிராம பஞ்சாயத்து விதிகள் 1999ன்படி, குடியிருக்கும் இடம் அல்லது குடிநீர் ஆதாரத்திலிருந்து 90 மீட்டருக்குள் எந்தவொரு நபரும் எந்த இடத்திலும் சடலத்தை புதைக்கவோ அல்லது எரிக்கவோ கூடாது என்று சட்டத்திற்கு எதிராக கிராம் பிரசிடெண்டிட் அனுமதி வழங்கி உள்ளார் எனவும் அப்படிப்பட்ட விதிமீறலுடன் இந்த மின் மயானம் கட்டப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் SS சுந்தர் மற்றும் N  செந்தில்குமார் ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மயானம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தர நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது பற்றி நிலையான முடிவு வரும் வரை இந்த மின் மயானத்தை செயல்படுத்த கூடாது என கூறியுள்ளது.