இன்று கோவை வருகிறாரா துணை முதலமைச்சர் உதயநிதி?
- by CC Web Desk
- Dec 10,2024
Coimbatore
கோவையில் கடந்த 1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியவர் இரா.மோகன். போராட்டம் காரணமாக மிசா சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
கோவைக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்ற இவரை முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வரும்போதெல்லாம் சந்திப்பது வழக்கம். அவரது மறைவுக்கு தி.முக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி இரா.மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதியம் 1.00 மணிக்கு திரு.மோகன் இல்லத்திற்கு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.