கடந்த 11ஆம் தேதி, கோவை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் MSMEக்கள் உடன் நடைபெற்ற சந்திப்பில் மத்திய அரசால் வாழங்கப்படும் முத்ரா கடன் உதவி பற்றி பேசினார்.
அப்போது அவர், முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள் எனவும் கோவை மாவட்டத்தில் 20 லட்சம் பேருக்கு ரூ.13,180 கோடி கடன்களை வங்கிகள் வழங்கி உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த கணக்கு சரியானதா என கேள்விகள் எழுந்துள்ளன.
செப்டம்பர் 12 ஆம் தேதி மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்துகொண்டார். அப்போது கோவை மாவட்டத்தின் மொத்தம் மக்கள்தொகை 34 லட்சம் பேர் தானே? அப்போது எப்படி இந்த கடன் திட்டத்தில் 20 லட்சம் கணக்குகள் இருக்கும் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: நாடு முழுவதும் முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி கணக்குகள் உள்ளது. அதில் ரூ.29.75 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5.6 கோடி கணக்குகள் உள்ளது அதில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 20 லட்சம்+ கணக்குகளுக்கு ரூ.13,180 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வங்கிகள் மூலமாக தான் வந்தது என அவர் கூறியுள்ளார். இது சரியானதா என்பதை தான் விசாரித்து பதில் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் 20 லட்சம் முத்ரா அக்கவுண்டுகளாக?
- by David
- Sep 14,2024