2024ல் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபிக்கு இண்டிகோ சர்வதேச விமானங்கள் மற்றும் சிங்கப்பூருக்கு தினசரி விமானங்கள் தொடங்கப்பட்ட பிறகு, சர்வதேச பயணிகள் இயக்கம் 2024 நவம்பரில் 23,681 ஆக உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் சர்வதேச பயணிகள் இயக்க 16,629 ஆக இருந்துள்ளது. ஆக, 2024 நவம்பரில் கோவை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் இயக்கம் 42% அதிகரித்துள்ளது. மேலும் இதே காலத்தில் சர்வதேச சரக்கு கையாளுதலில் 107% அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 18% வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் சரக்கு போக்குவரத்து 12% அதிகரித்துள்ளது என இந்திய விமான நிலைய ஆணையம் நவம்பர் மாதத்தின் தரவுகளை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுத் துறையில், பெங்களூரு மற்றும் கோவாவுக்கு இண்டிகோ தினசரி கூடுதல் விமானங்களை இயக்குவதால், கோயம்புத்தூரில் பயணிகள் போக்குவரத்து 16% மற்றும் சரக்கு போக்குவரத்து 3% அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள டெர்மினல் கட்டிடத்தை மறுசீரமைப்பது, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சர்வதேச விமான சேவையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது கோவை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என கருதப்படுகிறது.