தமிழகத்தில் வெவ்வேறு விளையாட்டுகளில்  திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து, மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILNADU) கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகள் வாயிலாக, இலவச பயிற்சி மற்றும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 60 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ் நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கோவையில் நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து இன்று இந்த விடுதிக்கான இடம் தேர்வு குறித்து கோயம்புத்தூர் மாவட்டம் நேரு உள் விளையாட்டரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்கள் அருணா இந்த ஆய்வில் இனைந்து தகவல்களை வழங்கினர்.