தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் அரசு மாணவர்கள் தங்கும் விடுதிகள், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்று கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு A.P.நந்தகுமார் கூறும் போது :

கோவையில் உள்ள ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புது விடுதியின் கட்டுமான தரம், எத்தனை நாட்களில் முடிக்கதிட்டமுள்ளது என்பதை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்ததாகவும், அந்த விடுதி குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவியருக்கு பயன் தரக் கூடிய வகையிலே விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

அதைத்  தொடர்ந்து டைட்டில் பார்க்கில் 17 லட்சம் சதுர அடியில் சிறப்பாக இயங்கிக் கொண்டு உள்ளதாகவும், அந்த டைட்டில் பார்க்கில் கோவையை சுற்றி உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்பில் முன்னுரிமை  கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறியவர், அதன் பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில், உணவு தர ஆய்வகம் ( ரேஷன் கடைகளுக்கு வழங்கும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்யும் மையம்), அமைக்கப்பட்டு உள்ளது அதையும் இந்த குழுவானது ஆய்வு செய்து உள்ளது.

அம்ருத் திட்டத்திலும் குடிதண்ணீர் எப்படி வழங்கப்படுகிறது என்பதை மாநகர ஆணையாளரிடம் கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தவர். சில பகுதிகளில் தினம் தோறும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக் கூடிய நிலை, என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வழங்கப்படுகிறது என்றும் விரைவில் இவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் எந்த நேரத்திலும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கோவை மாநகர ஆணையாளர் உறுதி அளித்து உள்ளதாக தெரிவித்தார்.