மாம்பழத்தை ருசி பார்க்க ஊருக்குள் வந்த பாகுபலி யானை
- by CC Web Desk
- Apr 22,2025
Coimbatore
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது 'பாகுபலி' எனும் காட்டுயானை உணவு தேடி வருவது உண்டு.
நேற்றிரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை சமயபுரம் அடுத்துள்ள வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஊருக்குள் வந்த பாகுபலி உணவுக்காக அங்கிருந்த மாமரத்தை தும்பிக்கையால் உலுக்கியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினபாகுபலி வந்துள்ளது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். உணவுக்காக ஊருக்குள் வந்த யானை யாரையும் சீண்டாமல் மீண்டும் வனத்துக்குள் சென்றது.