பருவமழை துவங்கிய 2 நாட்களில் கோவை மாநகரில் உள்ள சிவானந்த காலனி ரயில்வே சுரங்கப்பாதை, மற்றும் பழைய அவிநாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை ஆகிய 2 இடங்களில் எதிர்பார்க்காத அளவு மழைநீர் தேங்கியது. 

நேற்று அவிநாசி மேம்பாலத்தின் கீழ் மழைநீரை தேங்குவதை தடுக்கும் நோக்கில் பழைய அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் வரும் ஆடிஸ் வீதி பகுதி அருகே சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. நிமிடத்திற்கு 5 லட்சம் லிட்டர் மழைநீரை கையாளக்கூடிய கட்டமைப்பு அங்கு உருவாக்கப்பட்டுவருகிறது. 

இதையும் படிங்க : கோவை மாநகரில் நிமிடத்திற்கு 5 லட்சம் லிட்டர் மழைநீர் கடந்து செல்ல பெரும் கட்டமைப்பை உருவாக்கும் பணி துவக்கம்!

இந்நிலையில் இன்று சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 18 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.