கோவை - பெங்களூரு இடையே ஞாயிறுகளில் இண்டிகோ வழங்கும் விமான சேவை 4 ஆக அதிகரிக்க முடிவு!
- by David
- May 20,2024
Coimbatore
கோவையிலிருந்து பெங்களூரு வழித்தடத்தில் இண்டிகோ விமான நிறுவனம் 4 விமானங்களை இயக்கி வருகிறது.
இதில் 4 விமானங்களையும் இந்த வழித்தடத்தில் செவ்வாய்கிழமை மட்டும் இயக்கி, மீத நாட்களில் 3 விமான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இனி ஞாயிறுகளிலும் இந்த வழித்தடத்தில் 4 விமானங்களை அந்நிறுவனம் இயக்கவுள்ளதாக தகவல்.
இந்த 4 விமானங்கள், கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் நேரம் :
காலை 7.30 மணி - 8.25 மணி
மாலை 4.10 மணி - 5.55 மணி
மாலை 6:30 மணி - 7.25 மணி
இரவு 10.45 மணி - 11.40 மணி
பெங்களுருவில் இருந்து கோவைக்கு வரும் நேரம் :
காலை 6:10 மணி - 7 மணி
மதியம் 2.50 மணி - 3.35 மணி
மாலை 4.55 மணி - 5.45 மணி
இரவு 7.20 மணி - 8.10 மணி