2025 ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு - அன்று மருதமலை முருகன் கோவில் செல்பவர்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில் இருந்து முக்கிய தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எதிர்வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு அந்த நாளில் மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. 2 சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோவில் பஸ் மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பஸ்களில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு தகவல் வெளிவந்துள்ளது.
ஜனவரி 1 மருதமலை முருகன் கோவிலுக்கு செல்ல திட்டமா? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி!
- by CC Web Desk
- Dec 25,2024