கோவை மாவட்டத்தில் உள்ள 1200க்கும் அதிகமான ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் 2025 பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் பணி ஜனவரி 13ம் தேதி வரை நடைபெற்றது.
இது அரிசி பெறும் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இந்த அட்டையை 11.12 லட்சம் (11,12,635) குடும்பங்கள் பெற்றுள்ளன.
வழக்கமாக பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு உடன் ரூ.1000 வழங்கப்படும். ஆனால் இம்முறை ரூ.1000 வழங்கப்படவில்லை. இதனால் இந்தாண்டு மக்கள் பெரும்பாலும் அதிருப்தி அடைந்தனர். மாவட்டத்தில் உள்ள 9.12 லட்சம் பேர் இந்த பரிசு தொகுப்பை பெற்றாலும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பரிசு தொகுப்பை வாங்கிகொள்ளவில்லை.
எனவே இவர்கள் இந்த பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள இன்று (20.1.2025) முதல் 25.1.2025 வரை வழங்கல் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அரசு வழங்கும் வேஷ்டி சேலை பெறாமல் உள்ளவர்களும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காத மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
- by David
- Jan 20,2025