கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பொது மக்கள் விவசாயிகளுக்கு மின் பயன்பாடு குறித்து ஓர் அறிவுறுத்தலை மின்வாரியம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் :-
பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவினை குறைத்திடவும், நமது நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில் பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் இயன்றவரை தங்களது விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முடிந்தவரை விவசாய மின்மோட்டார்களை இந்த நேரங்களில் உபயோகப்படுத்துங்கள்! கோவை விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
- by CC Web Desk
- Dec 13,2024