மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது. அவ்வாறு செய்வது சட்டத்திற்கு புறம்பானது. இது போன்ற செயல்கள் கோவை மாநகரின் பல இடங்களில் நடைபெறுகிறது.
அண்மையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் MG ரோடு பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர பேனர்கள் மொத்தம் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு மின் கம்பங்களில் வரிசையாக கட்டப்பட்டு இருந்தது. அவ்வாறு கட்டப்பட்டு 1 மாத காலமாகியும் அந்த பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு இப்பகுதியில் பேனர்கள் பொறுத்தப்படுவதை முதல் நாளே நமது செய்தி தளத்தில் நாம் பதிவு செய்திருந்தோம். அரசின் உடமையான மின் கம்பங்களை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் அவர்களின் சொத்து போல எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்துவருவதும் இது தடுக்கப்படாமல் இருப்பதும் எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்லும்?
மின் கம்பங்களில் தொடர்ந்து ரியல் எஸ்டேட் அறிவிப்பு, நோட்டீஸ் ஓட்டுதல் ஆகிய செயலில் ஈடுபடுபவர்கள் மீது TANGEDCO மற்றும் கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் இந்த பேனர்கள் இனி மின் கம்பங்களில் இடம்பெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாநகரில் உள்ள மின் கம்பங்களில் அனுமதியற்ற விளம்பர பேனர்கள் கட்டப்படுவது தொடர்கிறது!
- by David
- Nov 08,2024