'இசைஞானி'யின் இசைமழை கோவை கொடிசியாவில் மே 18ல் பெய்யாது! ரசிகர்கள் கவனத்திற்கு ...
- by David
- Apr 15,2025
Coimbatore
கோவை அவிநாசி சாலை வழியே உள்ள கொடிசியா மைதானத்தில் மே 18ம் தேதி 'இசைஞானி' இளையராஜாவின் கச்சேரி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வின் இடம், தேதி ஆகியவற்றை மாற்றியுள்ளனர்.
மே 18க்கு பதிலாக மே 17ம் தேதி கோவைப்புதூர் 'ஜி ஸ்கொயர்' 7ஹில்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனவும், இந்த நிகழ்வில் தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 700 முதல் ரூ. 1 லட்சம் வரை நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.