கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, குடித்து விட்டு வாகனத்தை இயக்குவது, போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை இயக்குவது போன்ற செயல்களை செய்தால் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் பல பகுதிகளில் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். 2024ல் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 941 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 901 வாகனங்களின் உரிமையாளர்கள் அபராதம் கட்டியபின்னர் அவை விடுவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒன்றுக்கும் அதிகமுறையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து ரூ.10.1 லட்சம் அபராதமாக பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.