ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குறிச்சி குளத்தில் உலகம் போற்றும் தமிழ் புலவர் திருவள்ளுவரின் 20 அடி உயர எஃகு சிலையை நிறுவப்பட்டுள்ளது.
அவர் எழுதிய 1,330 குறள்களைக் குறிக்கும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பத்தை நாளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது அங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
விரைவில் இந்த சிலை அமைந்துள்ள பகுதி செல்ஃபி எடுப்பதற்கான முக்கிய இடமாகவும் கோவையின் பிரபலமான இடங்களில் ஒன்றாகவும் மாறவுள்ளது.