கோவை மாநகரின் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள மைதானத்தில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த மைதானம் உருவாக உள்ள இடத்தில் இன்று (20.11.24) ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய இந்த மைதானத்தின் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தின் ஹாக்கி விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் பணிகள் துவங்கி, 2025 ஏப்ரல் மாதத்தில் பயணப்பாட்டுக்கு கொண்டுவர திட்டமுள்ளது என்றார். கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகளும் விரைவில் துவங்கப்படும் என்றார்.
ஹாக்கி மைதானம் குறித்த வெளியான தகவலில், அது 6,500 சதுர அடியில் அமையும், சர்வதேச தரத்துடன் இருக்கும். மைதானம் அமையும் வளாகத்தில் 300 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகள், தேவையான பார்க்கிங் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். கோவை மாநகராட்சி தரப்பில் கட்டபடவுள்ள இந்த மைதானத்திற்கு ஒப்பந்ததாரர் இறுதியாகி உள்ளார். பணி ஆணை வழங்கப்பட்டு விட்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் மைதானப்பணிகள் நிறைவேற்றிட திட்டமுள்ளது என தெரியவந்துள்ளது.
PC : Jishnu Dev NR