சமீப காலமாகவே கோவையில் பெரும் பாடகர்கள், இசை அமைப்பாளர்களின் இசை கச்சேரிகள் அதிகம் நடைபெற்றுவருகிறது.

'இசைஞானி' இளையராஜா, 'இசை புயல்' ஏ.ஆர். ரகுமான் துவங்கி  'ராக்ஸ்டார்' அனிருத், ஜி.வி. பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா, ஹிப் ஹாப் தமிழா, சித் ஸ்ரீராம், ஜோநீதா காந்தி,  என பலரின் கச்சேரி கோவையில் நடைபெற்றுள்ளது.

அந்த வரிசையில், அடுத்த மாதம், தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ்,  சந்தோஷ் நாராயணன் மற்றும் இந்திய திரை உலகின் முன்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஆகியோரின் தனித்தனி கச்சேரிகள் நடைபெறுகிறது.

இதில் மார்ச் 8ம் தேதி கொடிசியா மைதானத்தில் சந்தோஷ் நாராயணன் கச்சேரி மற்றும் மார்ச் 15ல் அதே இடத்தில் ஸ்ரேயா கோஷல் கச்சேரி நடைபெறுகிறது. மார்ச் 15ல் ஸ்ரேயா கோஷல் கச்சேரி நடக்கும் அதே நாளில் ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரி நடைபெறுகிறது.
மேலும் இந்த கச்சேரி ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாநகருக்குள் ஏற்கனவே ஸ்ரேயா கோஷல் கச்சேரி நடைபெறும் நாளில் ஹாரிஸின் கச்சேரி மாநகருக்குள் இருக்கும் ஹிந்துஸ்தான் கலை கல்லூரி வளாகத்தில்  நடைபெறமால் மாநகரை விட்டு வெளியே உள்ள மைதானத்தில் நடந்தால் ரசிகர்கள் அவ்வளவு தொலைவிற்கு எளிதாக சென்று வரமுடியுமா என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது.

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரியில் பிரபல பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரன், நரேஷ் ஐயர், ஹரிஷ் ராகவேந்திரா, திவாகர், சைந்தவி, சத்யா பிரகாஷ்,  ஸ்ரீநிஷா, ஸ்ரீதர் சேனா, ஷர்மி மற்றும் பலர் பட உள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் கச்சேரி களைகட்டும் என்கின்றனர் ஹாரிஸ் ரசிகர்கள். எது எப்படியோ, அடுத்த மாதம் திரை இசை பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.