கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து இன்று மதியம் 3:20 மணி அளவில் கருப்பு புகை வெளியாகி வருகிறது. தீ விபத்து காரணமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் காற்று புகையை பல இடங்களுக்கு சுமந்து சென்றுகொண்டுள்ளகாக கூறுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தீயை அணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்ற வருடமும் இதே போல வெள்ளலூர் குப்பை கிடங்களில் ஏப்ரல் மாதம் தீ பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.