தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று வ.உ.சி.பூங்கா சாலையில் தேசிய சுகாதார பணியின் கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதாரமான உணவுத்தெருவினை திறந்து வைத்தார்.

 

2023 அக்டோபர் மாதத்தில் இந்த திட்டபணி துவங்கியது. 2024 மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் பணிகள் நிறைவடைவது தாமதமாகி சென்றது.

 

24 கடைகளை (தலா 330 சதுர அடி) உள்ளடக்கிய இந்த உணவுத் தெருவில் முக்கிய பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.ஆனால் கடைகளை நடத்த டெண்டர்  பெறுபவர்கள் இறுதி ஆவது தாமதம் ஆகி வந்ததால் இதன் திறப்பும் தாமதம் ஆனது. 

 

டெண்டரின் முதல் சுற்றில் 10 கடைகள் ஏலம் எடுக்கப்பட்டது. மீதம் உள்ள 14 கடைகளை ஏலம் எடுக்க பெருமளவில் வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது. 

 

தற்போது இந்த வளாகம் திறக்கப்பட்டுள்ளது என்பதால் மிகவிரைவில் இங்கு கடைகள் வியாபாரத்தை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.