எச்.டி.எஃப்.சி வங்கியின் துணை நிறுவனம் மற்றும் முன்னணி பங்குத் தரகு நிறுவனமான எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் லிமிடெட் அதன் நிறுவனத்தின் அதிகாரிகளைப் போல் போலியான நபர்கள் தொடர்பு கொள்வது மற்றும் வாட்ஸ்அப் குழுக்களை உள்ளடக்கிய மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதற்கு எதிராக வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது. 

எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் அனைத்து முதலீட்டாளர்களையும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் சுட்டிக்காட்டப்பட்டு, உறுதியளிக்கப்பட்டு அல்லது உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதாகக் கூறும் எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது தயாரிப்புக்கும் சந்தா செலுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இந்த போலி குழுக்கள் வாடிக்கையாளர்களை முக்கியமான தகவல்களைப் பகிர சொல்லும். அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து பணப் பரிமாற்றம் செய்ய சொல்லியும் ஏமாற்றலாம். பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் போன்ற வர்த்தகச் சான்றுகளை வாடிக்கையாளர்களிடம் எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் ஒருபோதும் கேட்காது என எச்சரிக்க விரும்புகிறது. 

எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ், ஆதார் அல்லது பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்அப் அல்லது அதிகாரப்பூர்வமற்ற சேனல்கள் மூலம் கோருவதில்லை. மேலும், வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்கப்படுவதில்லை. அதிகாரப்பூர்வ தளங்களுக்கு வெளியே நிதி பரிமாற்றத்திற்கு வலியுறுத்துவதுமில்லை.

பாதுகாப்பை உறுதிசெய்ய, அதிகாரப்பூர்வ எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆப் ஸ்டோர்கள் போன்ற நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். 

வாடிக்கையாளர்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் குழுக்களுடன் உரையாட நேரிட்டால், அவர்கள் உடனடியாக நியமிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவைக் குழுவிடம் புகாரளிக்க வேண்டும். மேலும் உதவிக்கு அல்லது மோசடியைப் புகாரளிக்க, எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் வாடிக்கையாளர் சேவையை 022-39019400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸின் சிடிஒ அண்ட் சிஒஒ, சந்தீப் பரத்வாஜ் கூறுகையில், "முதலீட்டாளர்கள் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது மற்றும் முழுமையான ஆராய்ச்சி மற்றும் நம்பகமான தகவல்களின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பது முக்கியம். 

எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் என்று கூறும் எந்தவொரு தகவல்தொடர்புகளின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். எங்கள் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மட்டுமே நீங்கள் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்” என்றார்.