கோவையில் நாளையுடன் நிறைவடைகிறது ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி!
- by David
- Feb 22,2025
சென்ற ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக ஆர்.எஸ். புரம் மற்றும் கொடிசியா சாலைகளில் நடைபெற்று வந்த 'ஹாப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாநகர காவல் இனைந்து வழங்கும் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி' கோவை மக்களுக்காக நடத்திவருகின்றனர். இந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட சாலைகளில் வாகனங்கள் நடமாட்டம் நிறுத்தப்பட்டு, சாலைகள் மக்கள் வசம் கொண்டாட ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நாளை (23.2.25) ஜென்னில் கிளப் அருகே வரும் கொடிசியா சாலையில் காலை 7 மணிக்கு இதன் கடைசி நிகழ்வு நடைபெறுகிறது. வழக்கமான விளையாட்டுகளுடன், யோகா, ஜும்பா டான்ஸ், வள்ளி கும்மி, டி.ஜே., சைக்கிள் ஓட்டும் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.