கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி 3 வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நான்காவது வாரமான இன்றும் காலை 6:30 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வழக்கமாக டிஜே நிகழ்ச்சி அதிகளவு இதில் இடம்பெறும் நிலையில் இரண்டாவது வாரம் பொதுமக்கள் நடனமாடி தடுப்புகளை சாய்த்ததில் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டதால் இந்த முறை டிஜே நிகழ்ச்சி நடத்தப்படாமல் மெலோடி பாடல்கள் பெரும்பாலும் இடம்பெற்றன. 

 

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிலர் சாண்டா கிளாஸ் வேடமடைந்து ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த நிலையில் குழந்தைகள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் சில பொதுமக்கள் அவர்களது செல்லப் பிராணிகளுடன் வந்திருந்தனர்.