இன்று (03.09.2024) கோவை மாநகராட்சியில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக இந்த கூட்டம் வழக்கம் போல நடைபெறும் என மாநகராட்சியின் அதிகாரபூர்வ செய்தி குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.