கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில் நாளை (3.9.2024) கோவை மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் பொதுமக்கள் நேரடியாக வழங்க முடியும்.