கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 4,434 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர். நிகழ்ச்சிக்கு வேளாண் பல்கலை வேந்தர் என்ற அடிப்படையில் தலைமை தாங்க உள்ளார் ஆளுநர்.