இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று 1 பவுன் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்தது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. இன்று ஒரு பவுன் ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 விலை அதிகரித்து, ஒரு சவரன் ரூ.52,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.