உலக அளவில் தங்க நகை தயாரிப்பில் முக்கிய இடத்தை கொண்டுள்ள கோவைக்கு குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ₹124 கோடி மதிப்பில் தொழிற் வளாகம் கட்டப்படும். இது NABL அங்கீகாரம் கொண்ட ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட வளாகமாக இருக்கும். இதில் 2000 நேரடியாகவும், 1500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு  உருவாக்கப்படும் என கோவையில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

நேற்று தங்க நகை தொழில் பூங்கா விரைந்து உருவாக்கப்பட வேண்டும் என்று அத்துறை சார்ந்தவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பொற்கொள்ளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கெம்பட்டி காலனி பகுதியில் நேரில் ஆய்வு நடத்தி அவர்களுடைய கோரிக்கைகள் என்னவென்று கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.