கோவை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தைப்புலி கடந்த 1ம் தேதி நள்ளிரவு ஒரு தோட்டத்துக்குள் புகுந்து 4 ஆடுகளை கொன்று 1 ஆட்டை கவ்வி சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் சிசி டிவி காட்சிகள் வைரல் ஆனது. சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுத்தை புலி அடுகளை எங்கு வேட்டை ஆடியதோ  மீண்டும் அதே இடத்துக்கு ஆடுகளை தேடி வந்துள்ளது. மீண்டும் ஆடுகள் அங்கு உள்ளதா என அது பார்க்கும் காட்சிகள் தற்போது வைரலாக துவங்கி உள்ளது.