ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தர்ராஜன்   அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார் . எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதலாம் நாள் விழாவிற்கு, கோவை அல்ஸ்டாம் நிறுவனத்தின் மனிதவளத் மேம்பட்டு குழு தலைவர், சாயா பாலசுப்ரமணியம்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில்,தொழில் நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும் இந்த தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அடிப்படைகளை வலுப்படுத்துவது குறித்தும் வளாகத்தில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு  அவர் வலியுறுத்தினார்.

இரண்டாம் நாள்  விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரத்தின்  எம்பெடெட் - குரு எல்.எல் .சி.நிறுவனத்தின் இயக்குனர், ஹரீஷ் ஜானகிராமன், கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில்,  மாணவர்கள் எப்போதும் நேர்காணலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். மகாபாரதத்தில் இருந்து அனுமானங்களை மேற்கோள் காட்டி, உடல், ஆன்மா மற்றும் மனதில் செயலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இறுதியாக, தற்போதைய போக்குகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் படிக்கும் பழக்கத்தை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக, இக்கல்லூரியில்1996-2000 கல்வி ஆண்டில்  பயின்ற முன்னாள் மாணவர்கள் ,  கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி   நிறுவனத்தின் மனிதவளத் மேம்பட்டு குழு இயக்குனர் சக்திவேல் ராஜசேகர் ,பெங்களூரு . இன்ஜினியரிங் ஆர்ம் எம்பெடட் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர், பழனியப்பன் சோமசுந்தரம் கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை  திறம்பட  எதிர்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பு  எவ்வாறு உள்ளது  என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்தது  மாணவர்களுக்கு பயனுள்ளதாக  அமைந்தது.

மேலும், இப்போது  பயின்று கொண்டிருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழும் பரிசும் வழங்கினார்கள்.