2025 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள TNPSC Group 2 & 2 A முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
வாரம் இரு மாதிரித் தேர்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள் கலந்துரையாடல், நூலக வசதி ஆகிய பலன்களை இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்பவர்கள் பெற முடியும். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் மையத்தை நேரடியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ - studycirclecbe@gmail.com தொலைபேசி மூலமாகவோ - 8189919755 தொடர்புகொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கு வாரந்தோறும் இலவச மாதிரித் தேர்வு அறிவிப்பு
- by CC Web Desk
- Dec 12,2024