கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கல் கடுமையாக இருந்து வரும் நிலையில் கோவை மாநகர காவல் துறை தன்னார்வ அமைப்பினர் பங்களிப்போடு மாநகரில் பணியாற்றி வரும் 200க்கும் அதிகமான போக்குவரத்து காவலர்களுக்கு காகித கூழ் தொப்பிகள் (Pith Hats) வழங்கும் திட்டம் துவங்கி உள்ளது.

முதல் கட்டமாக 20 போக்குவரத்து பெண் காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் இந்த தொப்பிகளை வழங்கினார். தொடர்ந்து மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பிகள் வழங்க்கப்பட உள்ளது.

வெயில் வெப்பத்தின் தாக்கம் ஏற்பாடதாக வகையில் இந்த இந்த தொப்பிகள் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு கண் கண்ணாடிகள்,குளிர் மோர், குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டது.