கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டுவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் 30.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேவாங்கர் கல்யாண மண்டபம், உதகையில் மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

மாபெரும் இம்முகாமில் மகளிர் மருத்துவம், எலும்பியல், வயிறு & குடல், நரம்பியல், சிறுநீரகவியல், பல், இருதயம், நுரையீரல் போன்ற துறைகளுக்கான மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

மேலும், இம்முகாமின் சிறப்பு அம்சங்களாக, அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு 25% வரை கட்டண சலுகை வழங்கப்படவுள்ளது. அதனோடு, சராசரி இரத்த சர்க்கரை அளவு, பி.எம்.ஐ, இரத்த அளவு ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பப்பை பரிசோதனை, எக்கோ கார்டியோகிராம், ஈ.சி.ஜி, எலும்பு அடர்த்தி சோதனை, அடிவயிற்று ஸ்கேன் போன்றவை மருத்துவர்களால் பரிந்துரை செய்பவர்களுக்கு இலவசமாக பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று குடலிறக்கம் (ஹெர்னியா), மூலம் / ஆசனவாய் வெடிப்பு, பித்தப்பைகல், கர்ப்பபை கட்டிகள், சினைப்பை கட்டிகள், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வெரிகோஸ் வெயின், புரோஸ்டேட் வீக்கம், குழந்தையின்மைக்கான ஆலோசனை, தைராய்டு சிகிச்சை, சிறுநீரகக் கல் போன்ற அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனை வழங்கப்படவுள்ளது.தேவைப்படுவோருக்கு சிறப்பு கட்டண சலுகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் துறைசார் மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், முழு ஈடுபாட்டுடன் சேவையாற்ற தயார் நிலையில் உள்ளனர்.

இந்த முகாம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே குறிப்பிடலாம். சேவை ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எவ்விதக் கட்டணமும் இன்றி பொதுநலன் கருதி இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.