கோவை வானிலையை ஆய்வு செய்யும் இளம் வானிலை ஆயவலர்கள் கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிவித்துள்ளனர்.

அவர் கூறுகையில்:- கோவை மாநகரில் அவ்வப்போது லேசான மழைப்பொழிவும் குளிர்ச்சியான சூழலும் வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், பாலக்காடு மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

பவனி, நொய்யல், அமராவதி ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும். இதனால் அணைகள் பெருமளவு நீரை பெரும். இந்த காலகட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். 

இவ்வாறு தெரிவித்தனர்.