கோவை மாவட்டத்தில் உள்ள இனிப்பு மற்றும் காரங்களை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களில் தீபாவளியை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் திடீர் ஆய்வுகள் அக்டோபர் 18 முதல் 28 வரை நடத்தப்பட்டது.

இதில் இனிப்பு காரங்களை தயாரிக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட 1780 லிட்டர் எண்ணெயை அதிகாரிகள் கைப்பற்றினர் என தகவல் வெளியாகி உள்ளது.  மொத்தம் 436 இனிப்பு/காரங்களை தயாரிக்கும் ஹோல்சேல், சில்லறை விற்பனை நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை தவிர, அனுமதிக்கப்பட்ட அளவை விட இனிப்புகளில் அதிக நிறங்களை பயன்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 306 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 57 சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பேக்கிங் செய்ய தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய நிறுவனங்களில் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.