தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தில் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில் ரூ. 1.45 கோடி மதிப்பில் உக்கடம் பெரியகுளத்தில் மிதக்கும் சோலார் மின் நிலையத்திற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் சம்மந்தமான பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கடந்த 10-15 நாட்களாக பெரியகுளத்தில் சோலார் தகடுகளை (Solar Panels) பொருத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது.

320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் 0.5 ஏக்கர் பரப்பளவில் இந்த மிதக்கும் சோலார் மின் நிலையம் அமைகிறது. குளத்தில் சோலார் பேனல்கள் மிதக்கும் நிலையில் இருக்க அதற்கான ANCHORING BED அமைப்பு முதலில் நடைபெற்றது. இதற்கான FLOATING FIBER அமைப்புகள் அங்கு பொருத்தப்பட்டு அதன் பின்னர் பேனல்கள் அங்கு உறுதியாக அடுக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் இன்வெர்ட்டர், ட்ரான்ஸபார்மர் போன்ற அமைப்புகள் இந்த மின் நிலையத்தில் அமையவுள்ளது. எனவே இந்த பணி நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர 2 மாதங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது ஒரு நாளுக்கு 154 கிலோ வாட் மின்சாரத்தை இதன் மூலம் கோவை மாநகரம் பெறமுடியும்.