இன்று கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்ட நிலையில், கோவை மாநகரின் வெவ்வேறு இடங்களில் இன்று மாலை 4 மணி முதல் மழை பெய்ய துவங்கியது.

குறைந்தது 1 மணி நேரத்திற்கு நிற்காமல் பெய்த நல்ல மழையால் வெயிலின் தாக்கம் மறைந்து, குளிர்ச்சியான சூழல் உருவானது. மாநகரில் காந்திரபும், கணபதி, டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம், சிவானந்தாகாலனி உள்ளிட்ட பல இடங்களில் நல்ல அளவில் மழை பெய்தது.

இந்த ஆண்டின் கோடை காலத்தில் பெய்த முதல் மழை இது என்பது குறிப்பிடத்தக்கது.