கோவையில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த காகம் ஒன்றுக்கு தீயணைப்பு துறை வீரர் ஒருவர் சி.பி.ஆர் எனும் முதல் உதவி செய்து அதை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்த செயல் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோவையில் தீயணைப்பு துறை அதிகாரி வெள்ளத்துரை கோவை மாநகரில் உள்ள கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு வெளியே உள்ள டிரான்ஸ்பார்மர் வயர் மூலம் மின் தாக்குதலுக்குள்ளான காகம் ஒன்று இருக்கு CPR என முதல் உதவி செய்யும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முதலில் மயக்க நிலையில் இருக்கக்கூடிய இந்த காகம் செல்லதுரை தொடர்ச்சியாக செய்யக்கூடிய முதலுதவி காரணமாக மெதுவாக சுயநினைவு மீண்டும் பெறும் காட்சி தற்போது வேகமாக பரவிவருகிறது. பதட்டத்தில் காகம் அவரை கொத்த முயன்றபோதும் தொடர்ந்து அதற்கு அவர் உதவி செய்வது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
காகம் என்றும் பாராமல் அதற்கு தனது மூச்சை கொடுத்து உதவிய இந்த தீயணைப்பு வீரருக்கு வாழ்த்துக்கள்!
காகம் என்றாலும் காப்பது எங்கள் கடமை...வைரலாகும் கோவையை சேர்ந்த தீயணைப்பு வீரர்! என்ன காரணம்?
- by David
- Sep 20,2024