கோவை அவிநாசி சாலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த மின் பெட்டியால் பரபரப்பு!
- by David
- Mar 22,2025
Coimbatore
கோவை அவிநாசி சாலை, ஹோப்ஸ் பகுதியில் இன்று மாலை மின் பெட்டி ஒன்று தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த மின் பெட்டியில் தீப்பிடித்து எரிந்து புகை வெளிவந்தது. இதை கண்ட அருகில் இருந்த கடைக்காரர்கள் தீயை முதலில் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்று, அது பலன் தராத நிலையில் தீயணைப்பு சிலிண்டர் (Fire Extinguisher) மூலமாக தீயை அணைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மின்சார துறையினரின் கவனத்திற்கு இதை எடுத்துச்சென்றனர். அதன் காரணமாக அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.