ஹோப் காலேஜ் அருகே பற்றி எரிந்த கார்!
- by David
- Mar 08,2025
கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீளமேட்டில் இருந்து சிட்ரா செல்லும் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது ஹோப்ஸ் ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது பழுதாகி, காரில் இருந்து புகை கிளம்பியுள்ளது. சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் காரை நிறுத்தி உடனே வெளியே இறங்கினார்.
அதற்கு பின் கார் திடீரென தீப்பிடித்தது. ஒரு சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கார் முழுவதும் பரவிய நிலையில், போலீசாருக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பீளமேடு தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் 6 பேர் கொண்ட குழுவாகச் சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்தில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.
இச்சம்பவத்தால் ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.