கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ
- by CC Web Desk
- Feb 19,2025
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை மேட்டிற்கு அருகில் பெரும்பாலான முற்செடிகள் வளர்ந்து கிடக்கின்றன. பெரும்பாலான செடிகள் காய்ந்து கிடக்கின்றன.
இந்நிலையில் அங்கிருந்த குப்பைகளில் திடீரென தீ பற்றி அருகில் காய்ந்து கிடந்த செடிகளுக்கும் மளமளவென பரவி உள்ளது.
இதனால் அங்கிருந்து அதிகப்படியான கரும்புகை வெளியேறிய நிலையில் அதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
தீ பற்றியதற்கான காரணம் தெரியாத நிலையில் வெயில் காரணமாக இதுபோன்று நடந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள காய்ந்த செடிகள் மற்றும் முற்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.