வருகின்ற செப்டம்பர் 11ம் தேதி கோவைக்கு வருகை தர உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் GST வரி விதிப்பாலும் அதில் உள்ள பிரச்சனைகளையும் ஜாப் ஆர்டர்கள் செய்கின்ற தொழில் முனைவோர்களை நேரடியாக சந்தித்து வரிவிதிப்பில் உள்ள இடர்களை கேட்டு அரிந்து MSME தொழிலுக்கு உள்ள பாதிப்புகளை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான FOCIA கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் சமீபத்திய கூட்டம் இன்று (7.9.2024) அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், நடராஜ் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் FOCIA சார்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு வேண்டுகோள்!
கோவை மாநகராட்சியின் ஆய்வுக்கு வருகின்ற அதிகாரிகள் தொழில் வரி, குப்பை வரி செலுத்த சொல்லி தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அந்தத் தொகையை செலுத்தச் சொல்லி நிர்பந்தம் செய்வதால் MSME தொழில்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
எனவே கோவை மாநகராட்சி ஆணையாளர், குறு சிறு தொழில் முனைவோர்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து வரி விதிப்பை முறைப்படுத்திடவும் தொழில்துறையினருக்கு அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்ற நெருக்கடியில் இருந்து தொழிற்துறையினரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
சர்ப்பாஸ் சட்ட நடவடிக்கை - பழைய நடைமுறையே வேண்டும்!
வங்கி கடன் பெறும் தொழில் முனைவோர்கள் தொடர்ச்சியாக தொழில் நெருக்கடியால் 90 நாட்கள் கடனுக்கான தவணை தொகை கட்ட தவறினால் வங்கிகள் கடுமையான சர்பாஸ் சட்டத்தை பயன்படுத்தி தொழில் முனைவோர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதும் தொழில்களை முடக்கும் நடவடிகையால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் அவர்கள் சர்ப்பாஸ் சட்ட நடவடிக்கையை ஏற்கனவே இருந்தது போல்180 நாட்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற தரவேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மின்சார வாரியத்தின் திடிர் அதிரடி நடவடிக்கை
கோவை மண்டலத்துக்குட்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஒரு மாத காலமாக குறுந்தொழில் உடையவர்களின் தொழிற்சாலைகளில் மின் கணக்கிடுகின்ற பொழுது powar factor கான அபாராத விதிப்பு பயன்படுத்தும் கட்டணத்துக்கு இணையாக அபராத தொகை வசூல் செய்து வருகின்றார்கள்.
மின்சார வாரியத்தின் இந்த திடிர் அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை குறு சிறு தொழில் துறையின்ர்க்கு எற்ப்படுத்தி உள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு நிலை கட்டண உயர்வால் தவித்து வரும் தொழில்துறையினர் மேல் பேரடியாக இந்த அபராத விதிப்பு என்பது இருக்கிறது.
அபராத விதிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட மின் தலைமை பொறியாளர் கோவை தொழில் அமைப்புகளை அழைத்து பேசி அபராத விதிப்பு தவிர்த்து தொழில்துறையினருக்கு உதவுகின்ற வகையில் உரிய வழி காட்ட வேண்டும் என FOCIA கேட்டுக்கொண்டது.
கோயமுத்தூர் வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுருளிவேல் சிவசண்முககுமார் சாகுல் ஹமீது பாண்டியன் மணி MSME மணி சாகுல் உள்ளிட்டு கூட்டமைப்பில் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கோவை வரும் மத்திய நிதியமைச்சர் GST பிரச்சனைகளை MSME தொழில் முனைவோர்களிடம் நேரடியாக கேட்டறியவேண்டும் - FOCIA வேண்டுகோள்
- by CC Web Desk
- Sep 07,2024