எவ்வித விவாதமும் இன்றி கொண்டுவரப்பட்டுள்ள, நில ஒருங்கிணைப்பு சட்டத்தை, தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டப்பேரவையில் தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை முன்மொழிந்தது. மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில், எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக ஆளுநரும் இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர் நிலைகளையும் அழிக்கும்  வகையில் இந்த சட்டம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து, பல தொடர் போராட்டங்களை ஏற்கனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தியுள்ளது. 

இதனை கண்டித்து இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சூ பழனிச்சாமி தெரிவித்தார்.