தற்போது அவிநாசி சாலையில் 10.1 கிலோ மீட்டருக்கு உருவாகி வரும் மேம்பாலத்தை மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோவை உப்பிலிபாளையம் சிக்னலில் துவங்கி கோல்டுவின்ஸ் பகுதியில் முடிவடையக்கூடிய இந்த மேம்பாலத்தை இன்னும் 5 கிலோ மீட்டர்கள் நீட்டிப்பதால் நீலாம்பூர் பகுதி வரை இந்த மேம்பாலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதனால் கோவை விமான நிலையத்தை அடைய திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் எளிதில் விமான நிலையத்திற்கு செல்ல முடியும். இந்த நீட்டிப்பு செய்யக்கூடிய பகுதியில் கூடுதலாக ஒரு ஏறுதலத்தை ஏற்பாடு செய்ய திட்டங்கள் உள்ளது. ஒருவேளை அவ்வாறு நீட்டிப்பு செய்ய அரசு அனுமதி கிடைத்தால், இதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் அதிகமானதாக இருக்காது.

எனவே நீட்டிப்பு நடைபெற சாத்தியமுள்ள பகுதியில் போக்குவரத்து என்பது எந்த அளவுக்கு உள்ளது என்பதை பற்றி ஆராய்ந்து இதற்காக ஒரு தனி விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அதை அரசுக்கு சமர்ப்பித்து அதன் பரிசீலனைக்கு பின்னர் இது குறித்து பணிகள் எப்படி துவங்கும் என்பது தெரிய வரும். அடுத்த ஆண்டு மார்ச் - ஜூன் மாதத்தில் இந்த மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் முடிவதற்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

படம் : கோப்பு படம்