தென் மேற்கு பருவமழை காலம் மெதுவாக துவங்கி உள்ளது. இது கோவை மாநகர பகுதிகளில் வலுவடையவில்லை என்றாலும் மாவட்ட பகுதிகளில் வலுவாக உள்ளது. சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பது இதற்கு ஒரு சான்று எனலாம்.

இந்நிலையில் வானிலை ஆய்வாளர்கள் தகவலின் படி, அடுத்த 10 நாட்களில் கோவையின் மேற்கு பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்தவகையில், கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாய்க்கன்ப்பாளையம், மருதமலை, சிறுவாணி, மதுக்கரை ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு கனமாக இருக்க வாய்ப்புள்ளது.