கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் அரசு பொருட்காட்சி வரும் ஞாயிறு (27.4.25) மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது.

இதில் 30க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், 20க்கும் மேற்பட்ட தனியார் அரங்குகள், குழந்தைகளைமகிழ்விக்க விளையாட்டு அமைப்புகள், வருகை தரும் மக்கள் சுவைக்க பலவகை உணவுகள், குளிரூட்டும் செயற்கை பணியரங்கு விளையாட்டு உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரியவர்களுக்கு ரூ.15ம், குழந்தைகளுக்கு ரூ.10ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.