ரூ.13,000 மதிப்புள்ள பட்டாசுகள் வெறும் ரூ.2000க்கு கிடைக்கும். 'சிவகாசி பேக்டரியில் இருந்து நேரடி விற்பனை' என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விளம்பரம் வந்தால் அதை நம்பி உடனே பட்டாசு வாங்க பணம் செலுத்த வேண்டாம்.

ஏனென்றால் இதுபோல பணம் செலுத்தி, ஏமாந்ததாக சைபர் குற்றங்களைப் பதிவு செய்வதற்கான போர்ட்டலில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டும் 17 புகார்கள் பதிவாகியுள்ளன என்கிறது தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் செய்திக் குறிப்பு.

இவ்வாறு மிகப்பெரிய தள்ளுபடி விலையில் பட்டாசுகள் என சோசியல் மீடியாவில் வரும் விளம்பரங்களை நம்பி அது காட்டும் இணையதளம் மூலம் வாங்கலாம் என அதற்குள் நுழைந்து வங்கி கணக்கு எண், கடவு எண் ஆகியவற்றை நம்பி செலுத்துவது ஆபத்தாக அமையலாம். 

எனவே ஆன்லைன் வழியில் பட்டாசு விற்பனை என்று வாட்ஸாப்பில் ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அதை முடிந்தவரை தவிருங்கள்.