தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய்யின் கட்சிக்கு என ஒரு பாடலுக்கு இசை அமைத்து தரவேண்டும் என தன்னிடம் கேட்டால் கண்டிப்பாக இசை அமைத்துக்கொடுப்பேன் என பிரபல இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

கோவையில் வருகின்ற 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது முதலில் பேசிய யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களும், புதிய முயற்சிகளுடனும் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முயற்சி ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன் என கூறினார். இசை ரசிகர்கள் மிகவும் வைப் உணர்வு கொண்டவர்கள், அவர்களின் உணர்வு மூலமாக தான் நிகழ்ச்சியில் நல்ல நல்ல பாடல்கள் என்னால் பாட முடிகிறது என்றார்.

பழைய பாடல்கள் ரீமேக் செய்யும் வழக்கம் இன்றும் தொடர்ந்து வருவதை பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு பாடலை அவ்வாறு ரீமேக் செய்வது அப்பாடலின் மற்றொரு வெர்சன் (வகை) என்று தான் தான் பார்ப்பதாக கூறினார். இதனால் பாடலின் ஒரிஜினாலிட்டி கெடாது என்றார்.

பழைய பாடல்களை பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்சனை எழுவது குறித்து பேசிய அவர், அவ்வாறு ஈடுபடுகையில் நிச்சயம் சிக்கல்கள் வரும் ஆனால் முன்னதாகவே அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவது சரியான முறையாக இருக்கும் என்றார். 

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் முதல் முறையாக 360 டிகிரி நிகழ்ச்சி நடத்துகிறோம். நிகழ்ச்சி கொடிசியாவில்  நடைபெறுகிறது. சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.கோவையில் நடக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

டிக்கெட் 500 முதல் 25,000 வரைக்கும் விற்பனை செய்கிறோம்.  20 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தள்ளு முள்ளு நடக்காமல்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுவன் நிகழ்வில் போதை பொருள் தேவையோ இருக்காது. யுவனின் பாடல்களே ஒரு போதை தான் என்றனர்.