கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் இலக்கியத் திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர் டாக்டர் ஸ்ரீவித்யா சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். புக் மார்க் தயாரித்தல், ஆடை அலங்கார அணிவகுப்பு, மாதிரிகளை வடிவமைத்தல், குழு நடனம் மற்றும் நாடகப் போட்டிகள் நடைபெற்றன.

மாணவிகளின் கற்பனைத் திறன், படைப்பாற்றல் வெளிப்படும் வகையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கி. சித்ரா வெற்றியாளர்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகளை வழங்கினார்.