கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமப் பகுதியில், வசந்தி என்பவரின் விவசாய நிலத்தில் பலா மரங்களும், முருங்கை மரங்களும் உள்ளன. 

இந்நிலையில், வனத்தை விட்டு உணவு தேடி ஊருக்குள் வந்த யானைகள், இந்த பகுதியில் பலா மரங்கள் இருப்பதை கண்டு அந்த மரத்தின் கிளைகளை உடைத்து, அங்கு இருந்த பலாப் பழங்களை சாப்பிட்டு சென்றுள்ளது. யானைகள் நடமாட்டத்தால் பயிர்கள் சேதமாகி உள்ளதாக தகவல் உள்ளது. இதுபோன்று அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில், யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகளும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.